ஓ இதயமே!

Posted by | December 27, 2015 | Tamil Poems / Kavithaigal | No Comments

One of the top favorite song of my wife, “Iktara” from Hindi movie “Wake Up Sid”. The song & movie was released a while back but I have not heard it before. When she introduced me to this song, it became an instant favorite of my mine and I have lost count on how many times I have heard it in loop 😀
Following is a Tamil version which I have translated for her and yeah, do I have to say she loved it very much 😉

O-Idhyame-CoverArt

சரணம் 1:
ஓ இதயமே நீ துலைந்ததேனோ?
உந்தன் நினைவை கொண்டு சென்றதாரோ?
உந்தன் நினைவை கொண்டு சென்றதாரோ? இதயமே..
உறங்கும் பொழுதும், விழித்த பொழுதும்
கனவில் மிதக்கிறாய்..
அவள் யாரோ என்று தேடி தேடி
கண்கள் மூடி உருகி உருகி
கண்கள் மூடி உருகி உருகி
அவள் யாரோ என்று தேடி தேடி
கண்கள் மூடி உருகி உருகி
எங்கு செல்கிறாய்?
சென்று துலைகிறாய்..
காதல் கனவிலே..

சரணம் 2:
அவளின் கண்கள் பார்த்தே நீயும் வார்த்தை மறக்கிறாயே
இதழ்கள் உதிர்க்கும் புன்னகை கண்டே அவளில் கரைகிறாய்
நீ என்னவானாய் என்று எண்ணி வியக்கிறேனே
வாழ்க்கை முழுதும் அவளுடன் வாழ தவித்து கிடக்கிறாய்
இதோ வருகிறாள்! உன்னில் தெரிகிறாள்..
உன்னில் தெரிகிறாள்..
அவள் யாரோ என்று தேடி தேடி
கண்கள் மூடி உருகி உருகி
கண்கள் மூடி உருகி உருகி
அவள் யாரோ என்று தேடி தேடி
கண்கள் மூடி உருகி உருகி
எங்கு செல்கிறாய்?
சென்று துலைகிறாய்..
காதல் கனவிலே!

Leave a Reply

Your email address will not be published.