நாய் குட்டி!

Posted by | June 15, 2014 | Tamil Poems / Kavithaigal | No Comments

My younger sister is an avid pet lover. Once when we were walking back to our home there was this cute little puppy plying on the street. She made me to stop there and I was just enjoying all the reactions and gesture she was making. Out of nowhere a Mini Auto ran over the puppy and  left my sis in tears and myself in shock. She started yelling at the driver like anything and even went to an extend to hit him. I had to console her all the way and walk her to home. Wrote this Tamil rhyme in memory of that little puppy and for my sis, with a happy ending.

சாலையின் ஓரமாய்..
அங்கும் இங்கும் பார்த்தபடி
ஒரு சின்ன நாய் குட்டி!
தலைய ஆட்டி ஆட்டி செல்கிறதே
ஒரு சின்ன நாய் குட்டி!

பார்த்து விட்ட தங்கச்சி,
துள்ளி துள்ளி குதிக்குறா..
வளையல் கைய ஆட்டுறா..
என் சட்டை கையை பிடித்து கொண்டு
ஆமை வேகம் நடக்குறா..
உள்ளத்திலே உருகுறா..
நாய் குட்டி புரியும் சேட்டையும்,
அவளை பார்க்கும் என் கண்களும்
மாறி மாறி பாக்குறா..
சந்தோசமா சொல்லுறா..

அண்ணா!
அது நடந்து செல்லும் அழகு பாரேன்..
கொழு கொழுனு இருக்கு பாரேன்..
ஹையோ,
அந்த குட்டி குட்டி காத நானும்
தொட்டு பாக்கணும்..
என் கைகளிலே அள்ளி கொண்டு
கொஞ்ச செய்யணும்..
யாருடையதாய் இருந்தாலென்ன
நீ கேளேனே அண்ணா!
நம்ம வீட்டுக்கு இத எடுத்து போலாம்
நீ கேளேனே அண்ணா!

நான் சொல்வதை எல்லாம்
கேட்பவள் போல்
உதட்டை பிலுக்கி பிலுக்கி பார்க்கிறாள்..

அட தங்கமே!
நீ கொஞ்சுவதற்காகவே
ஆட்டு குட்டி இருக்குதே..
நீவி நீவி பார்ப்பதற்கு
மாட்டு கண்ணு இருக்குதே..
குய்யா குய்யானு கத்திக்கிட்டே
கோழி குஞ்சு சுத்துது..
சிட்டு குருவி ஒன்ன நீயும்
வீட்டுக்குள்ள வளர்க்குற..
போனமாசம் தானே ஒரு
செம்மி குட்டி வாங்கினோம்..
இங்கயே இருக்கட்டும்
இது வேண்டாமே தங்கம்!
நான் சொன்ன பேச்ச கேளேன்டி
இது வேண்டாமே தங்கம்!

தலைய ஆட்டி ஆட்டி சொல்கிறேன்
வேண்டாமே என..
அவளும்,
தலைய ஆட்டி ஆட்டி சொல்கிறாள்..
சரிடா அண்ணா,
இப்போவே எடுத்து போலாம்
வீட்டுக்கிந்த குட்டிய!

செம்மண் காட்டு தோட்டத்தில்,
பட்டி தொட்டி எங்கிலும்
சுற்றி திரியும் ஜீவன்கள்..
அத்தனைதான் இருப்பினும்..
பார்ப்பது எல்லாம் கேட்கிறாள்..
இந்த விலங்கு பிரியைய் தங்கச்சி!

முறைத்து முறைத்து பார்க்கிறேன்..
சேட்டையே செய்யாமல்,
கைகள் இரண்டை நீட்டி கொண்டு
குட்டி நாயை அழைக்கிறாள்!

பவ் பவ் பவ் நாய் குட்டி,
என் கிட்ட வாடி செல்ல குட்டி!
என்னோட வீட்டுக்கு வா,
உன்ன நல்லா பாத்துப்பேன்!
எங்க தோட்டத்துல இருக்குதே
மாடு கண்ணு எல்லாமே..
உனக்கு அப்பப்போ ஊட்டிடுவேன்
பால் சோறுதான்!
பெரிய களம் அங்கே கிடக்குது
நீ ஓடி விளையாட,
இன்னொரு குட்டி பையன் இருக்கிறான்
நீ மோதி விளையாட!

இவ கூப்பிட்ட உடனே
வர போகுதாக்கும்
ஒரு சின்ன நாய்க்குட்டி..
போடி போனு நிக்குறேன்
நான் ஜம்பமாகத்தான்!

அட..

நான் கொட்ட கொட்ட
விழித்து கொண்டு
பார்க்கும் போதே..
குடு குடுனு ஓடியாந்தது
இவ மேல தாவுது..
போச்சுடானு தலையில கைவெச்சு
அவள பாக்குறேன்..
போடானு முதுககாட்டி
நாய் குட்டிய தூக்கறா..
யாராச்சும் கத்தராங்களா?
நான் பின்னாடி பாக்குரேன்..
சந்தோசமா கொஞ்சிகிட்டு
அவ முன்னாடி போகுறா!
 

Leave a Reply

Your email address will not be published.